செம ஜாலி!! இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை!!

 
மழை

தமிழகத்தில்  வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. சாலையோரங்களில் இளநீர், நுங்கு , வெள்ளரிக்காய், தர்ப்பூசணி கடைகள் முளைக்கத் தொடங்கி விட்டன. மக்களை குளிர்விக்கும் வகையில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மார்ச் 7 முதல்  தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

மார்ச் 8 முதல் 10ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில்   லேசானது முதல் மிதமான மழை   பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மார்ச் 11-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web