செம ஜாலி!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு பொது விடுமுறையை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவு தினங்கள் உள்ளூர் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பிறப்பிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நாளை மார்ச் 13ம் தேதி திங்கட்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 1ம் பணி நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, மார்ச் 13ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ள்ளார்.மார்ச் 13ம் தேதி பணி நாளை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 1ம் தேதி வேலை நாளாக கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க