”ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!! ” காலம் முழுதும் காதலை கொண்டாடுங்க!!

 
காதல்

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும், காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம், ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!" என்று காதலை கொண்டாடுகிறார் பாரதியார்.  சாதி, இனம், மதம், மொழி தாண்டியது காதல். தமிழர்கள் சங்க இலக்கியத்திலே காதலையும் , வீரத்தையும் கொண்டாடி தீர்த்தனர்.

காதல்

இலக்கியங்களில் பல்வகையான காதல் குறித்து விளக்கப்பட்டுள்ளது. 90களுக்கு பிறகு கண்டதும் காதல், காணாமலே காதல், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், சைவ காதல், அசைவ காதல், இன்டர்நெட் காதல், செல்போன் காதல், பேசா காதல், தெய்வீக காதல், பருவ காதல், முற்றிய காதல்  என பலவகைகளாக பரிணாமம் பெற்றுள்ளன. எது உண்மை காதல் என்பது மட்டும் தான் யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. நாளை  பிப்ரவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. மனிதன் மட்டுமல்ல உலகின்  அனைத்து உயிரினங்களும் காதலால் தான் ஜீவித்திருக்கின்றன.

அம்மா,அப்பா, உடன்பிறப்புக்கள், நண்பர்கள், உறவினர்கள், நம்மை சுற்றி இருப்பவர்கள் மட்டுமல்ல நாய் , பூனை வளர்ப்பு பிராணிகள் மீதான பாசம் அனைத்துமே ஒவ்வொரு விதமான நேசம் கலந்த காதல் தான். ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே காதலர் தின கொண்டாட்டங்கள் தொடங்கி விடுகின்றன. ஏன் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது? எப்போது முதல் வழக்கத்தில் உள்ளது என்பது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். காதலர் தினம்  ரோமப் பேரரசு காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் எனக் கருதிய அந்நாட்டு அரசர் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என தடை விதித்தார். 

காதல்

இந்த சூழலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் திருமணம் செய்து வைத்தார். இது அரசனுக்கு தெரிய வந்ததும்  பாதிரியார் வேலண்டைனுக்கு பிப்ரவரி 14 ம் தேதியன்று மரண தண்டனை விதித்தார்.  அவரது நினைவாக ஒவ்வொரு பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன . எதுவாக இருப்பினும் வாழும் காலம் வரை நம்மை சுற்றியுள்ளவர்களை காதலிப்போம். காதலின் மீது விமர்சனங்கள் , குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் பருவ வயதில் காதல் என்பது இயற்கை எனக் கூறினாலும் காதலுக்கு வயதே கிடையாது. நாம் பூமியில் வாழும் காலம் வரை காதலிக்கலாம்.  முழுமை பெற்ற காதலென்றால் முதுமை வரை கூட வரும் என்கிறார் கண்ணதாசன். எந்த நிலையிலும் பிரியாமல் மனதால் ஒருமித்து வாழும் காதல் என்றும் நெகிழ்ச்சிக்குரியது. ஆதலால் மானிடரே காதல் செய்வீர்!! 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web