கிரிக்கெட் ஜாம்பவானைச் சந்தித்த கால்பந்து ஜாம்பவான்... மெஸ்ஸி, சச்சின் சந்திப்பால் வைரலாகும் இணையம்!

 
மெஸ்ஸி சச்சின்

உலகக் கால்பந்து ஜாம்பவான் மற்றும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் இன்று மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்தார். உலகின் இரு பெரும் விளையாட்டு ஜாம்பவான்கள் சந்தித்துக் கொண்ட இந்த அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மெஸ்ஸி
சுற்றுப்பயணமாக இந்தியா வந்த லயோனல் மெஸ்ஸி, இன்று மும்பை வந்தடைந்தார். மும்பையில் உள்ள வான்கடே மைதானத்திற்கு வருகை தந்த அவருக்கு, அங்கு நிரம்பியிருந்த ரசிகர்கள் "மெஸ்ஸி, மெஸ்ஸி" என்று கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், மைதானத்தில் நடைபெற்ற ஒரு காட்சி கால்பந்துப் போட்டியை மெஸ்ஸி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இந்தியக் கால்பந்து ஜாம்பவானான சுனில் சேத்ரியையும் அவர் சந்தித்தார்.

மெஸ்ஸி

சுனில் சேத்ரிக்கு அடுத்தபடியாக, கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்து மெஸ்ஸி சிறிது நேரம் உரையாடினார். அப்போது, சச்சின் டெண்டுல்கர் தனது கையெழுத்திட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஒன்றை மெஸ்ஸிக்குப் பரிசாக வழங்கினார். விளையாட்டுத் துறையில் தலைசிறந்து விளங்கும் இரு ஜாம்பவான்கள் சந்தித்தது தொடர்பானப் புகைப்படங்கள் தற்போதுச் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!