எச்-1பி, எச்-4 விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்படும்... அமெரிக்கா திடீர் உத்தரவு!
அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு கடத்தல்களை வேகப்படுத்துவதற்காக குடியேற்றத்துறையுடன் இணைந்து தனி குழுவையும் அமைத்துள்ளார். இந்தியர்களை அதிகமாக பாதித்த எச்-1பி விசா கட்டணமும் ரூ.90 லட்சம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான் உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு நிரந்தர தடைவிதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முடிவு வெளிநாட்டு குடியுரிமை விண்ணப்ப விசாரணையில் மேலும் கடுமை அவர்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபத்தில், எச்-1பி மற்றும் எச்-4 விசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு புதிய நிபந்தனையை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள கணக்குகள் அனைத்தும் ‘பொது’ முறையில் திறந்துபார்க்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இந்த கணக்குகள் குடியேற்ற அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
