16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்களுக்குத் தடை... !
கர்நாடகா மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் Siddaramaiah அறிவித்துள்ளார். குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் கல்வியில் செல்பேசி பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையின்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதற்காக அரசு பல நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் Mekedatu Dam Project தொடர்பாக புதிய அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மாநிலப் பொதுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவர்கள் சமூக வலைதள பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் முடிவு அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
