படங்கள், தகவல்களுக்கு சமூக வலைதளங்கள் தான் பொறுப்பு... மத்திய அரசின் கடும் எச்சரிக்கை!
கடந்த 29-ந் தேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக வலைதளங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆபாசம், அநாகரிகம், சட்டவிரோத உள்ளடக்கங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் மற்றும் உள்ளடக்கங்களுக்கு அந்தந்த நிறுவனங்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். தவறான பதிவுகளை நீக்கி, கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கு அவற்றையே சட்டபூர்வமாக பொறுப்பேற்கச் செய்ய கடுமையான சட்டம் தேவை என்றும் கூறினார். இது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார். சமூக வலைதளங்களின் பொறுப்புணர்வு குறித்து இந்தக் கருத்து பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
