சமூக வலைதள வீடியோக்களை ஏற்க முடியாது!! தேர்தல் ஆணையம் அதிரடி!!

 
ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம்தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். அனைத்து கட்சியினரும், சுயேச்சைகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பரோட்டா போடுவது, டீ போடுவது, இளநீர் குடிப்பது, பாத்திரம் கழுவி கொடுப்பது என மக்களை கவர நூதன முறையிலும் வாக்கு சேகரிக்கின்றனர்.

இதனிடையே, ஆளுங்கட்சியான திமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக அதிமுக, பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. பணம் கொடுப்பதாகவும், பிரியானி கொடுப்பதாகவும் அதிமுக புகார் அளித்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி

மேலும், வாக்காளர்களின் பெயர், செல்போன் எண்கள் பொதுவெளியில் கசிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும், களநிலவரம் குறித்தும் விரிவான விளக்கம் அளிக்குமாறு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிசத்யபிரத சாகுவுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் சத்யபிரத சாகு, ஈரோடு கிழக்கு தொகுதியில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவடா, தேர்தல்நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக, மாவட்ட தேர்தல்அலுவலர், தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிறைய புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி

பணப்பட்டுவாடா தொடர்பானவீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டாலும், அதை ஆதாரமாக ஏற்க முடியாது. இதுவரை பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக யாரும் மனு அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web