13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களுக்குத் தடை!

 
social media social media

ஆந்திர மாநிலத்தில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குழந்தைகளின் மனநலத்தையும் கல்வியையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

15 வயதுக்குட்பட்ட  குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த விரைவில் தடைச்சட்டம்.!

ஆந்திர சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில் 2026–27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். சிறுவர்கள் அதிக நேரம் கைப்பேசி மற்றும் இணையத்தில் செலவிடுவது குறித்து அரசு கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சோஷியல் மீடியா

இதனால் சிறுவர்கள் இணைய உலகில் செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வி மற்றும் உடல்நலத்தில் கவனம் செலுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!