அதிர்ச்சி... புயல் காற்றில் அந்தரத்தில் பறந்த சோபா.. வேரோடு சாய்ந்த மரக்கிளைகள்... வைரலாகும் வீடியோ!

 
வானில் பறந்த சோபா

இயற்கை சீற்றங்களால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் என்பதை அடிக்கடி நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பது நம் ஊர் பழமொழி.இதை யாரும் நேரில் நாம் பார்த்ததில்லை. முன்புக்கும், முன்பு இது நடந்திருக்கலாம் என்பதே இந்த பழமொழி.  அப்படி ஒரு விஷயம் துருக்கியில் நடந்திருக்கிறது.

துருக்கியில் தற்போது கடும் புயல் காற்று வீசி வருகிறது. இதில் வெட்டவெளியில் இருக்கும் மரக்குப்பைகள் தொடங்கி பிளாஸ்டிக் பொருட்கள் பறந்தன. அதே நேரத்தில் தோட்டத்தில் போடப்பட்டிருந்த சோபா ஒன்று இந்தக் காற்றில் பறக்க தொடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


துருக்கியில் கடுமையான புயல் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இது குறித்து  சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் துருக்கியின் அங்காராவில் கடுமையான புயலின் போது நடந்த ஒரு அசாதாரண நிகழ்வைக் காட்டுகிறது. அங்கு நகரம் முழுவதும் காற்று வீசியதால், ஒரு வெளிப்புற சோபா ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து தூக்கி வானத்தில் பறந்தது.குரு ஆஃப் நத்திங் என்ற ட்விட்டர் பக்கத்தில், சோபாவை காற்றில் பறக்கும் அந்த  வியப்பூட்டும் தருணத்தைப் படம் பிடித்துள்ளது.  மேலே பறக்க தொடங்கிய சோபா  சிறிது நேரத்தில் மீண்டும்  கீழே விழுந்ததில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.  தோட்டத்தில் விழுந்துவிட்ட  பிறகு சோபா பயன்படுத்த கூடிய நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

சோபா

இச்சம்பவம் மே 17ல் அங்காராவில் பயங்கர புயலால் தாக்கப்பட்டது. அங்காராவில் புயல், மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. நகரம் முழுவதும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. கட்டிடங்களின் கூரைகளும் ஜன்னல்களும் அடித்துச் செல்லப்பட்டன, மரங்கள் வேரோடு சாய்ந்தன, குப்பைகள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. 

இதையும் படிச்சுபாருங்க... ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web