8வது மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை!

கேரள மாநிலத்தில் கோட்டயம் அருகே கஞ்சிக்குழி பகுதியில் வசித்து வருபவர் தாமஸ். அவரது மகன் 23 வயது ஜேக்கப் தாமஸ். இவர் பிடெக் படிப்பு முடித்தவர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே தனக்கு வேலைப்பளு மிகவும் அதிகமாக இருப்பதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஜேக்கப் தாமஸ், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!