பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் பலி!
ஆந்திராவில் பந்தயம் வைத்து அதிக அளவில் பீர் குடித்த இரு மென் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னமய்யா மாவட்டம் பண்டவாரி கிராமத்தைச் சேர்ந்த மணிகுமார் (35), புஷ்பராஜ் (27) ஆகியோர் பலியாகினர்.
Two Software Engineers died due to excessive #alcohol consumption, the #Techies lost their Lives after consuming 19 #beers , in drinking #beer competition during #Sankranthi festival, in #KVPalli mandal, #Pileru constituency, #Annamayya district, #AndhraPradesh .
— Surya Reddy (@jsuryareddy) January 19, 2026
It is… pic.twitter.com/XoSndf8Ij8
சங்கராந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக நண்பர்கள் குழுவுடன் அவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். அப்போது நண்பர்களுக்கிடையே நடந்த விபரீத பந்தயத்தில் 19 பாட்டில் பீர் குடித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இருவருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
