சோஹோ ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு... உயர்நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல்!
சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கில், இந்தியாவில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணையரை நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்புவின் மனைவி பிரமிளா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. தனபால், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், ஸ்ரீதர் வேம்பு தன்னையும் தனது மகனையும் கைவிட்டுச் சென்றதாக பிரமிளா மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரமிளா சீனிவாசன் இருவருக்கும் 1993ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டு விவாகரத்து கோரி வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
