திருச்செந்தூரில் ராட்சத அலைகளால் மண் அரிப்பு.. கடல் 5 அடி தூரம் உள்வாங்கியதால் அச்சம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், கடல் சீற்றம் காரணமாகப் பெரும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 அடி தூரத்திற்குக் கடற்கரை மண் அரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களும் பக்தர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, அதிகாலை முதலே கடலில் நீராடிவிட்டுச் சாமி தரிசனம் செய்வது வழக்கம். திருவிழா மற்றும் முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள்.

இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் கோவில் கடல் மிகவும் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் தொடர்ந்து எழுந்து வந்து கரைப்பகுதியை பலமாக மோதியதால், வழக்கமாக பக்தர்கள் குளிக்கும் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.

இந்தக் கடல் சீற்றத்தின் காரணமாக, கடற்கரையின் மணல் பகுதி சுமார் 5 அடி தூரத்துக்குக் கடல் உள்வாங்கி மண் அரிக்கப்பட்டுள்ளது. மண் அரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், நேற்று காலையில் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடினர். அதன் பின்னர் கோவிலுக்குள் சென்று சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி தரிசனம் செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
