குடியரசு தினம் … நடுக்கும் குளிரில் வீரர்கள் பிரம்மாண்ட ஒத்திகை!

 
குடியரசு

 

நாட்டின் 77-வது குடியரசு தினம் வருகிற 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒற்றுமை, சமத்துவம், கலாசார பாரம்பரியத்தை போற்றும் வகையில் டெல்லி கடமை பாதையில் விழா நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கொண்டாட்டமும் நடத்தப்படுகிறது. ராணுவத்தின் வலிமை மற்றும் இந்தியாவின் பன்முக கலாசாரம் இந்த விழாவில் பிரதிபலிக்க உள்ளது.

இதனை முன்னிட்டு, இன்று 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட மத்திய ஆயுதப்படைகள் இதில் பங்கேற்கின்றன. “சுதந்திரத்திற்கான மந்திரம் வந்தே மாதரம், வளத்திற்கான மந்திரம் சுயசார்பு இந்தியா” என்ற கருத்துகளுடன் அணிவகுப்பு வாகனங்களும் இடம் பெறுகின்றன. டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அணிவகுப்பு ஒத்திகை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குடியரசு

குடியரசு தின விழாவில் விமான சாகச நிகழ்ச்சிகள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. முப்படைகளின் அணிவகுப்புடன், மாநிலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகளும் அணிவகுக்கும். இந்த ஆண்டு விழாவில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!