பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை ... பத்மஸ்ரீ தமிழறிஞர் சாலமன் பாப்பையா பிறந்தநாள் !

சாலமன் பாப்பையா 1936ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதி, மதுரை மாவட்டம் சாத்தங்குடியில், சுந்தரம் ஐயா அவர்களுக்கும் பாக்கியம் அம்மா அவர்களுக்கும் 9வது மகனாகப் பிறந்தவர், இவருக்கு 4 சகோதரர்கள், 4 சகோதரிகள் என பெரிய குடும்பம். நெசவுதான் பிரதானத் தொழில். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம்தான் குடும்பத்தின் ஆணிவேர். முதல் உலகப்போர் வந்த சமயம் நெசவுத் தொழில் நலிந்து போக, மதுரையில் ஆரம்பிக்கப்பட்ட ’மதுரா கோட்ஸ்’ ஆலையை நம்பி மதுரைக்கு குடிபெயர்ந்தது சாலமன் பாப்பையாவின் குடும்பம்.
இளமை முழுக்க வறுமையில் வாடிய பாப்பையா மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் பள்ளியில் 4ம் வகுப்பு வரை படித்தவர். அதன் பின்னர் டிஎல்சி பள்ளியில் 6ம் வகுப்பு வரை படித்தார். அமெரிக்கன் கல்லூரி ஹைஸ்கூல் எனப்படும் உயர் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை முடித்தவர். அந்தப் பள்ளி சார்புடைய கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் வரை படித்து முடித்தார். படிப்பு முடிந்து அரசாங்க உத்யோகத்திற்கு தேர்வு எழுத செங்கல்பட்டில் வருவாய்த்துறையில் பணி கிடைத்தது. நண்பர்கள் உதவியால் முதுகலைத் தமிழை தியாகராஜர் கல்லூரியில் படித்து முடித்தார், சாலமன் ஐயா.
படிப்பு முடிந்ததும் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். மேடைகளின் மூலமாகவே அறியப்பட்டு வந்த பாப்பையாவின் பேச்சார்வத்திற்கு அடித்தளம் பள்ளியில் நடந்த பேச்சுப்பயிற்சி வகுப்புகளே அவர் அமெரிக்கன் கல்லூரி பள்ளியில் திருவள்ளுவர் கழகத் தலைவராக இருந்து அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.அப்போது இவர் நடத்திய பேச்சுக்கலை பாடமானது இவரை பேச்சு வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக்கியது. குறிப்பாக, எட்டையபுரம் பாரதி விழாவே, சாலமன் பாப்பையாவை கொல்கத்தா வரை சென்று பேசும் அளவுக்கு பிரபலபடுத்தியது.
இதுவரை 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் பேசியிருக்கும் பாப்பையாவுக்கு சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாக கூறுகிறார். ஜெயா பாயை திருமணம் செய்து விமலா சாலமன் என்ற மகளும் தியாகமூர்த்தி என்ற மகனும் இருக்கிறார்கள். மகள் விமலா, ஜப்பான் மொழியில் கற்றுத்தேர்ந்து ஆசிரியராக இருக்கிறார்.
இலக்கியம், மேடைகளுடன் ஷங்கர் இயக்கிய பாய்ஸ், சிவாஜி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாப்பையாவின் சாதனைகளைப் பாராட்டி, மாநில அரசு ‘கலைமாமணி’ விருதும்; மத்திய அரசு ’பத்மஸ்ரீ’ விருதும் வழங்கி கெளரவித்தது.தான் படித்த மதுரை வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளிக்கு ரூ.20 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கினார் சாலமன் பாப்பையா வழங்கினார். தற்போது வரை பேரார்வத்துடன் பெரும் தமிழ்த்தொண்டும் ஆற்றி வருகிறார் சாலமன் பாப்பையா .
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!