கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!

 
கண்கள்

சென்ற தலைமுறை வரை 40வயதில் வெள்ளெழுத்து 60 வயதில் பார்வை குறைபாடுக்காக கண்ணாடி அணிந்து வந்தனர். தொழில் நுட்ப வளர்ச்சி மாறி வரும் உணவு முறைகள் காரணமாக பிறந்த குழந்தை முதலே கண்பார்வை குறைபாடு தலைதூக்க தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மொபைல், லேப்டாப், கணினி பயன்பாடுகள் அதிகரித்து சின்னஞ்சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கையிலும் ஆறாம் விரலாய் மொபைல் போன்கள் தான். அருகில் இருப்பவர்களிடம் அனுசரித்து பேசுவதை விட்டு தொலைவில் உள்ளவர்களிடம் மணிக்கணக்கில் பேசுவது, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக போட்டோஸ், வீடியோஸ் , ரீல்ஸ் என எந்நேரமும் பிசியாக இருக்கின்றனர்.

கண்கள்

இதில் கண்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் மறந்து விடுகின்றனர். பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் முருங்கைக் கீரை இரண்டுமே கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லவை.  கண்களுக்குத் தேவையான ஏ மற்றும் அமினோ வைட்டமின் அமிலங்கள் இந்த கீரைகளில் அதிகளவில் நிறைந்துள்ளது.அதே போல் சிட்ரஸ் வகைப் பழங்களான திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை, நெல்லிக்கனியும் கண்களின் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவிசெய்கிறது. அதே போல் அருகம் புல் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது.  ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை வெளியேற்றவல்லவை.  

கண்கள்

உடல் எடை  , சளித் தொல்லை, ஜலதோஷம், இருமல், நீர்க்கோவை , வயிற்று வலி, கண்பார்வை கூர்மை, வயிற்றுப்போக்கு அனைத்துக்குமே சிறந்த நிவாரணி.  உணவு பழக்க வழக்கங்களுடன் தொடர்ந்து கணினியில் பணிபுரிபவர்கள் ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை 20 முறை கண்களை சிமிட்ட வேண்டும். தொலைவில் உள்ளவற்றை பார்த்து புத்துணர்ச்சி அடையச் செய்யலாம். கண்களை குளிர்ந்த நீரில் கழுவலாம். இரவில் தூங்கச் செல்லும் முன் ஈரமான பஞ்சை கண்களில் 15 நிமிடங்களில் வைத்திருக்கலாம். இதனால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். முகத்தின் அழகை கண்கள் தான் நிர்ணயம் செய்கின்றன.   கண்களை கவனத்துடன் காப்போம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web