சோம்நாத் கோவிலில் சுயமரியாதை திருவிழா… 11-ம் தேதி பிரதமர் மோடி தரிசனம்!
நம் நாட்டின் மேற்கு கடற்கரையில், குஜராத் மாநிலம் பிரபாஸ் பட்டனில் அமைந்துள்ள சோம்நாத் கோவில் உலகப் புகழ் பெற்றது. துவாதச ஜோதிர்லிங்கங்களில் முதல் ஜோதிர்லிங்கமாக சோம்நாத் சிவலிங்கம் போற்றப்படுகிறது. இந்த லிங்கத்தை தரிசித்தால் பாவங்கள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேறும் என்றும், மரணத்திற்கு பின் சொர்க்கம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை பெற்ற இந்த கோவில், கடந்த காலங்களில் பல வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது. ஆனாலும், ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து, இன்று கம்பீரமாக பக்தர்களை வரவேற்று வருகிறது. வரலாற்றின் சாட்சியாகவும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும் சோம்நாத் கோவில் திகழ்கிறது.
இந்த நிலையில், சோம்நாத் கோவிலில் சுயமரியாதை திருவிழா வரும் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆன்மீக மற்றும் சமூக நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன. சோம்நாத் கோவில் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதால், திருவிழாவின் நிறைவு நாளான 11-ம் தேதி அவர் கோவிலுக்கு வருகை தர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
