குடும்பத் தகராறில் கொடூரம்... மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகன்!
நீலகரி மாவட்டம் கூடலூர் அருகே பந்தலூர் வாளவயல் பகுதியில் வசிக்கும் அசோக் (35) என்பவருக்கு மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் மனைவி உறவினர் வீட்டிற்கு சென்றார். மனைவியை தேடி மது போதையில் மாமியார் மேரி (55) வீட்டிற்கு சென்ற அசோக், “மனைவி எங்கே?” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் மேரி மற்றும் அவரது மகன்கள் சுதாகரன், அஜித் ஆகியோருடன் சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த அசோக் அரிவாளை எடுத்து மைத்துனர்களை வெட்ட முயன்றார். தடுக்கச் சென்ற மேரி மீது அரிவாள் வெட்டு விழுந்தது.

மேலும் சுதாகரன் (29), அஜித் (28) ஆகியோரும் சரமாரியாக வெட்டப்பட்டனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் போலீசார் அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
