தந்தையை அடித்தே கொன்ற மகன்... குடிக்கு அடிமையானதால் விபரீதம்!

 
முருகேசன்

தமிழகம் முழுவதுமே குடி போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி வரும் போக்கு அதிகரித்து வருகிறது. குடிபோதையுடன், கஞ்சா, போதைப்பொருட்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடிக்க பணம் தராததால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த அரூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் காராள கவுண்டர்(85). இவர் தனது மகன் முருகேசனுடன்(50 ) தோட்டத்தில் வசித்து வந்தார். குடி போதைக்கு அடிமையான முருகேசன், போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது வீட்டில் தங்கி வருகிறார்.

முருகேசன்

இந்நிலையில் நேற்று முருகேசன் தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை காராள கவுண்டரை விறகு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்
தகவல் அறிந்து அங்கு வந்த மோகனூர் காவல் துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முருகேசனை கைது செய்து  போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் தந்தை மது அருந்த பணம் தராதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web