அதிர்ச்சி... கள்ளக்காதலனுக்காக தாயைக் கொன்ற மகள்!

 
கேரளா
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் முண்டூரில் நடந்த கொடூர சம்பவம் மக்களைக் கண்கலங்கச் செய்துள்ளது. வீட்டின் பின்புறத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட தங்கமணி என்ற பெண்ணின் மரணம் முதலில் விபத்து என கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியது .

ஆம்புலன்ஸ்

மரண காரணம் கொலை என உறுதியானதும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அக்கம்பக்கத்து மக்கள் கூறிய தகவல் இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. தங்கமணியின் கழுத்தில் வழக்கமாக அணிந்திருந்த தங்கச் சங்கிலி அவர் இறந்த நாளில் காணவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் ரேடாரில் மாட்டியவர் தங்கமணியின் சொந்த மகள் சந்தியா (45). கிடுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது.

போலீஸ்

தாயிடம் இருந்த தங்கச் சங்கிலி வேண்டும் எனப் போராடிய சந்தியா, மறுப்பு கிடைத்ததால் ஆத்திரத்தில் தன்னை வளர்த்த தாயையே கருத்தைப் பிடித்து நெறித்து உயிரை பறித்ததாக போலீஸ் வாக்குமூலத்தில் இடம்பெற்றது.

நிதின் (29) என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த சந்தியா, கள்ளக்காதலனுக்காக செயினைப் பறிக்க தாயைக் கொன்று விட்டு, பின்னர் தாய் தவறி விழுந்ததாக நடித்து சாட்சியங்களை மறைக்க முயன்றுள்ளார். இருவரும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!