தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை... நீதிமன்றம் தீர்ப்பு!

 
கல்லால் தாக்கி கொலை
 

தூத்துக்குடி மாவட்டத்தில், தந்தையை விறகு கட்டையால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே சோனகன்விளை, மேலத் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் முத்து (83/2022). இவரது மனைவி ரோஜா. இந்த தம்பதிக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இதில், 2வது மகன் சுடலைமணி (48), என்பவர் அவரது மனைவியை கடந்த 2020ல் கொலை செய்த வழக்கில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையி்ல அடைக்கப்பட்டார். 

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு ஜாமீனில் வந்த அவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் கடந்த 08.06.2022 அன்று 2வது மனைவியுடன் சொந்த ஊரான சோனகன்விளைக்கு வந்த அவர், தந்தையிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் மறுத்ததால் அங்கிருந்த விறகு கட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற தாயார் ரோஜாவையும் தாக்கியுள்ளார். 

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

இதில் படுகாயம் அடைந்த தந்தை முத்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து சுடலைமணியை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றவாளியான சுடலைமணிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.3ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜரானார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது