பெற்ற மகனே தந்தையை 15 முறை கத்தியால் குத்தி கொலை!

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத்தின் லாலாபேட்டாவில் வசிட்து வருபவர் 45 வயது ஆரேலி மொகிலி. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸில் பணிபுரிகிறார். அவரது மகன் சாய்குமாரும் அதே நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருப்பினும், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மொகிலி, எப்போதும் குடித்துவிட்டு வீட்டில் சண்டையிடுவார். குடும்பத்தகராறு மற்றும் சில காலமாக சொத்து தகராறுகளும் இருந்து வருகின்றன.
இதனால் விரக்தியடைந்த சாய்குமார், தனது தந்தையைக் கொல்ல முடிவு செய்தார். இந்நிலையில் நேற்று மதியம் லாலாபேட்டையில் இருந்து பேருந்தில் பயணம் செய்த மொகலியை சாய்குமார் பின்தொடர்ந்தார்.மொகிலி இ.சி.ஐ.எல். பேருந்து முனையத்தில் பேருந்திலிருந்து இறங்கியவுடன், பின்னால் இருந்து துரத்தி சென்று கத்தியால் அவரைத் தாக்கினார். சுமார் 15 முறை நடுரோட்டில் அனைவரும் பார்த்து கொண்டு இருக்கும்போதோ கண்மூடித்தனமாக குத்தினார்.
இதைக் கவனித்த பொது மக்கள் மொகிலியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மொகிலி காலமானார். நடுரோட்டில் தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சிகள் அங்கு அமைந்துள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், போலீசார் சாய்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!