சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி… !

 
சோனியா காந்தி
 

 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை மாலை அவர் மருத்துவமனைக்கு வந்ததாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராகவும் நலமாகவும் உள்ளது.

சோனியா காந்தி

நாள்பட்ட இருமல் பிரச்னை காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. தில்லியில் நிலவும் கடும் காற்றுமாசும் அவரது உடல்நலத்தைக் கவனத்தில் கொண்டு பரிசோதனைக்கு காரணமாக கூறப்படுகிறது.

சோனியா

மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சோனியா காந்திக்கு கடந்த டிசம்பர் 2025-ல் 79 வயது நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. அவரது உடல்நலம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரம் உறுதி செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!