5 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு இன்று சோனியாகாந்தி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் !

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஜூன் 15ம் தேதி வயிற்று தொடர்பான பிரச்சனை காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இரைப்பை குடல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் சோனியா காந்தி இன்று ஜூன் 19ம் தேதி வீடு திரும்பியுள்ளார்.
சோனியா காந்தியை அழைத்துச் செல்ல அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் 2025 பிப்ரவரியில் வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!