அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு? காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி!

 
சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. அங்கு நேற்று 2ஆவது நாள் மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அந்தவரிசையில் சோனியா காந்தி பேசியபோது, பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. பிரிவினை தூண்டப்பட்டு, ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. சிறுபான்மையினர், பெண்கள், பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக பாரத ஒற்றுமை யாத்திரை அமைந்துள்ளது. நல்லிணக்கம் சகிப்புத்தன்மை, சமத்துவத்தை வலியுறுத்தி பெருந்திரளான மக்கள் அதில் பங்கேற்றனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா ஒற்றுமை நடைபயணத்துடன் எனது ‘இன்னிங்ஸ்' (அரசியல் பயணம்) நிறைவு பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் தொண்டர்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும், இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

சோனியா காந்தி

எனது ‘இன்னிங்ஸ்' நிறைவு பெற்றது என்று கூறியுள்ளதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். 2024 மக்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட மாட்டார் என்றும் தெரியவந்துள்ளது. அடுத்தாண்டு தேர்தலில் அவர் வழக்கமாக போட்டியிடும் ரேபரேலியில் அவரது மகள் பிரியங்கா காந்தி களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?