அரசு வேலை, காப்பீட்டு பணத்துக்காக தந்தையைப் பாம்பால் கடிக்க வைத்து கொன்ற மகன்கள்!

 
திருவள்ளூர்
 

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையை அடுத்த தண்ணீர்குளத்தை சேர்ந்த கணேசன், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 22-ம் தேதி நள்ளிரவில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டுவிரியன் பாம்பு கடித்து இறந்ததாக கூறி, அவரது மகன்கள் அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்துச் சென்றனர். இது இயற்கை மரணம் போல தோன்றினாலும், பின்னர் நடந்த விசாரணை அதிர்ச்சி தரும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

ஆம்புலன்ஸ்

கடந்த ஆறு மாதங்களில் கணேசன் குடும்பத்தினர் பெயரில் 11 காப்பீடுகள் எடுக்கப்பட்டதும், அதில் கணேசன் மீது மட்டும் ரூ.3 கோடி காப்பீடு இருந்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இன்சூரன்ஸ் நிறுவன புகாரின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. செல்போன் உரையாடல்கள், தொடர்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில், கடன் தொல்லையில் சிக்கிய மகன்கள் அரசு வேலை மற்றும் காப்பீட்டு பணம் பெற தந்தையை கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது.

போலீஸ்

அதன்படி, பாம்பு பிடிப்பவர் உதவியுடன் விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை வீட்டிற்கு கொண்டு வந்து, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கணேசனை கடிக்க வைத்துள்ளனர். முன்பு ஒருமுறை நாகப்பாம்பை வைத்து முயற்சி செய்தும் அவர் உயிர்தப்பியதால், இந்த முறையில் திட்டமிட்டு கொலை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் மகன்கள் இருவரும், அவர்களுக்கு உதவிய நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறுகிய நாட்களில் மர்மத்தை உடைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!