நெகிழ்ச்சி... நடிகர் சோனுசூட் துபாயில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவிக்கரம்!

 
சோனுசூட் சோனுசூட்

போர் சூழ்நிலை காரணமாக துபாயில் சிக்கித் தவிக்கும் விமானப் பயணிகளுக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் தங்குமிடம் இல்லாமல் சிரமத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு உடனடி உதவி செய்யும் நடவடிக்கையை சோனு சூட் தொடங்கியுள்ளார்.

எந்த நிபந்தனைகளும் இல்லாமல் எந்த நாட்டினருக்கும் இலவச தங்குமிடம் வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கடினமான சூழ்நிலையில் மனிதநேயம் மட்டுமே முக்கியம் என்றும், சிக்கலில் உள்ளவர்கள் சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு கொண்டால் தனது குழு உதவி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கொரோனா காலத்திலும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சோனு சூட் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. அப்போது உணவு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து பலரின் பாராட்டைப் பெற்றார் என்பது நினைவுகூரப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!