"விரைவில் அரசியல் கட்சி தொடக்கம்... லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ் அறிவிப்பு!
சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள், தான் விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாகவும், ஊழலை ஒழிக்க விரும்பும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

"ஊழலை ஒழிக்க விரும்பும் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி குறித்துப் பேசுவோம். பழைய ஊழல் கட்சிகளைச் சுமக்க விருப்பமில்லை. த.வெ.க. தலைவர் விஜய் விரும்பினால் அவருடன் கூட்டணி அமைக்கத் தயார்," என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார். அவர் விரைவில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கி, அதற்கான பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் பகுதியில், JCM மக்கள் மன்றத்தைத் திறந்து வைத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அங்கு 1,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
