விரைவில்... இந்தியா முழுவதும் ஆன்லைனில் சொத்துப்பதிவு சட்டம்... !
இந்தியா முழுவதும் பல்வேறு துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய பல மாநிலங்கள் முடிவு செய்தன. இதனால் சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வரைவு மசோதாவை ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் வரும் நிலவளங்கள் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரபதிவு சட்டம் நாடு முழுவதும் பொருந்தும் என்றாலும், மாநிலங்கள் மத்திய அரசுடன் ஆலோசித்து திருத்தம் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மின்னணு பதிவு சான்றிதழ்களை வழங்கவும், டிஜிட்டல் ஆவணங்களை பராமரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னணு ஆவணங்களை தாக்கல் செய்வதுடன், முறைகேடுகளை தவிர்ப்பதற்காக ஆதார் அடிப்படையில் அங்கீகாரத்துடன் சம்மதம் பெற்று பத்திரப்பதிவுகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு விரும்புகிறது. தகவல் பெறும் திறனை மேம்படுத்துவதற்காக, ஆவணங்கள் குறித்த இதர முகமைகளையும், ஒன்றிணைக்கு இந்த வரைவு மசோதா ஆலோசனை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப பயன்பாடுகள் அதிகரித்து வருவது, சமூக - பொருளாதார நடைமுறைகள் மேம்பட்டு வருவது, பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவது இதன் மூலம் முற்போக்கான பதிவு கட்டமைப்பை உருவாக்குவதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு மசோதா, கடந்த 117 ஆண்டு காலமாக பின்பற்றப்படும் பத்திரப்பதிவு சட்டத்தை மாற்றும் எனத் தெரிகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
