இன்று பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் சவுமியா அன்புமணி... ‘மகளிர் உரிமை மீட்பு பயணம்’ தொடக்கம்!

 
சவுமியா செளமியா

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) துணை அமைப்பான பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சவுமியா அன்புமணி, தமிழகத்தில் உள்ளப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகப் போராடும் நோக்கில், 'தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்' என்ற பிரசாரப் பயணத்தை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறார்.

அன்புமணி மகள்கள்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் 108 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து சவுமியா அன்புமணி இந்தப் பயணத்தைத் தொடங்குகிறார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்குக் கிடைக்காமல் இருக்கும் 10 முக்கிய உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், பெண்களின் நிலையை உயர்த்துவதற்கும் விழிப்புணர்வுப் பிரசாரமாக இந்தப் பயணம் அமையும் எனப் பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுமியா அன்புமணி

சவுமியா அன்புமணி தலைமை தாங்கும் இந்தப் பிரசாரப் பயணம், காஞ்சீபுரம் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!