இன்று காரடையான் நோன்பு... கார அடை செய்யும் முறை!

பெண்கள் தங்களது கணவரின் நீடித்த ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக நோற்கும் விரதமே காரடையான் நோன்பு . மாசி மாதம் முடிந்து பங்குனி தொடங்கும் வேளையில் இந்த விரதம் தொடங்கப்பட வேண்டும். அதன்படி நடப்பாண்டில் காரடையான் நோன்பு நாளை மார்ச் 14 திங்கட்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது.
காரடையான் நோன்புக்கு மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி .
காரடையான் நோன்பு அடை
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 200கி
காராமணி -50கி
தேங்காய் - 1/2 மூடி
வெல்லம்-100கி.
ஏலக்காய் தூள்-1சிட்டிகை
செய்முறை:
காராமணியை 6 மணி நேரம் ஊற வைத்து, அதன் பின்னர் நன்றாக வேக விடவும். பச்சரிசி மாவை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். தூசு போக வடி கட்டி வெல்லத் தண்ணீர் கொதிக்கும் போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடியை இதனுடன் சேர்க்க வேண்டும்.
வறுத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும். மாவு வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து, அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்க வேண்டும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேக விட்டு எடுக்க வேண்டும். கமகம சுவையுடன் காரடையான் நோன்பு அடை தயார். சக்தி வாய்ந்த விரதம். மாங்கல்ய வரம் தரும் விரதம் காரடையான் நோன்பு. விரத முறைக்கு மட்டுமல்லாமல், பருவ பெண்களுக்கு ஏற்ற சத்தான உணவும் கூட இந்த அடை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!