தென் ஆப்பிரிக்கா டிக்ளேர் 549 ரன்கள்... ‘மெகா’ இலக்கை நோக்கி இந்தியா களமிறங்குகிறது!
கவுகாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா தன்னம்பிக்கையுடன் ஆட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த அவர்களுக்கு எதிராக இந்தியா 201 ரன்னில் சுருண்டதால் பாலோ-ஆன் சந்தித்தது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடந்த Proteas அணி விக்கெட் இழப்பின்றி முன்னிலை கட்டிய நிலையில் இன்று காலை துவங்கிய ஆட்டமும் அதே ரிதியில் சென்றது.

ரிக்கல்டன், மார்க்ரம் உள்ளிட்டோர் விரைவில் வெளியேறியபோதும் ஸ்டப்ஸ் – டோனி டி சோர்சி ஜோடி வலுவான கூட்டணியை அமைத்து இந்திய பந்துவீச்சை கட்டுப்படுத்தியது. 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி Proteas முன்னிலையை மேலும் உயர்த்தியது. பின்னர் ஸ்டப்ஸ் அரைசதம் கடந்த ஆட்டத்தால் Proteas இன்னிங்சை தள்ளிச் சென்று 94 ரன்களில் அவுடானார். அவர் வெளியேறிய உடனே தென் ஆப்பிரிக்கா 260/5 என டிக்ளேர் செய்தது.

இதனால் இந்திய அணிக்கு 549 ரன்கள் என மிகப் பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா நான்கு விக்கெட்டுகள் எடுத்தும் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 4-வது நாள் முடிவில் மிகப்பெரிய இலக்கை விரட்ட இந்தியா களமிறங்குகிறது;
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
