தென்னாப்பிரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை.. கட்டுபடுத்த முடியாமல் தவிக்கும் காவல்துறை..!!

 
தென்னாப்பிரிக்கா

உலகில் வன்முறைகள் அதிகம் நடக்கும் நகரங்களில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது...

தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் குற்ற விகிதங்கள் காவல் துறைக்கு மாற்றாக தனியார் பாதுகாப்புத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
கடந்த ஆண்டு சராசரியாக தினமும் 75 கொலைகளும், 400 கொள்ளைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஆப்பிரிக்காவின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா, உலகின் மிக வன்முறை நகரங்களில் முதலிடத்தில் உள்ளது.குற்றங்களுக்கு எதிரான போரில் தென்னாப்பிரிக்காவின் போலீஸ் படை தோல்வியடைந்து வருவதாகவும், அதனால்தான் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் வளர்ந்து வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

The 50 most violent cities in the world | BusinessInsider India

தற்போது பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வரும் முன்னாள் போலீஸ் அதிகாரி அன்டன் கோயன் கூறியதாவது: நிலைமை மோசமாகி வருகிறது.கடந்த 20 ஆண்டுகளில் கொலை விகிதம் அதிகரித்துள்ளது.தென்னாப்பிரிக்க நீதித்துறையின் தோல்வியே இந்த வன்முறைக்குக் காரணம்’’ என்றார். இந்த தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பயனாளர்களிடம் இருந்து மாதாந்திர கட்டணம் வசூலிக்கின்றன.

மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கார் தொலைந்து போனால் அதை கண்டுபிடித்து மீட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக, திருடர்களுக்கும் அவர்களுக்கும் இடையே கடுமையான துரத்தல் மற்றும் சண்டைகள் நடைபெறுகின்றன. அவர்கள் ஆயுதங்களை ஏந்துகிறார்கள். தென்னாபிரிக்காவின் போலிஸ் மற்றும் இராணுவத்தை விட 5 இலட்சத்திற்கும் அதிகமான தனியார் பாதுகாப்புப் படையினர் தற்போது பணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

These were the 50 most violent cities in the world in 2017

இந்த பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி தென்னாப்பிரிக்காவின் நடுத்தர மற்றும் கீழ் சமூக வகுப்பினருக்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தென்னாப்பிரிக்க போலீஸ் படை 2024க்குள் 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், 6 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொள்ள முடியாத அளவுக்கு மொத்த காவலர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web