தென் கொரிய அதிபர் இயோல் பதவி நீக்கம்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல். இவர் 2024 டிசம்பரில் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. டிசம்பர் 14ம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். இதன்மூலம் கைது செய்யப்பட்ட முதல் தென் கொரிய அதிபர் ஆனார்.இது குறித்த வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இவ்வழக்கில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இராணுவச் சட்டத்தை அறிவித்ததன் மூலம் அவர் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறி தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அடுத்து, விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!