சவரன் ரூ.1.06 லட்சத்தைக் கடந்து விற்பனை... தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 17, 2026) மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. நேற்று விலை சற்றே குறைந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,280 (நேற்றைய விலை: ரூ. 13,230). ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,240 (நேற்றைய விலை: ரூ. 1,05,840)
கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,120 வரை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று சற்றே குறைந்திருந்த விலை, இன்று மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று கிராமுக்கு ரூ.4 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் ரூ. 4 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.310க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,10,000 (நேற்றை விட ரூ. 4,000 அதிகம்) விற்பனையாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
