எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு வாழ்நாள் சாதனை... கலைத்துறை வித்தகர் விருது!

 
sp muthuraman
 

 

தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது இந்த ஆண்டுகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டுக்கான விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் 2025-ம் ஆண்டுக்கான விருதுக்கு பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்விரு கலைஞர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட உள்ளது.

தமிழ் திரைப்படத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் என கடந்த 2022-ல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் படி முதல் ஆண்டில் வசனகர்த்தா ஆரூர்தாஸ் விருது பெற்றார். தொடர்ந்து 2023-ம் ஆண்டில் கவிஞர் மு.மேத்தாவும், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி பின்னணிப் பாடகி பி.சுசீலாவும் இந்த விருதைப் பெற்றனர்.

இந்த ஆண்டுகளுக்கான விருது அறிவிப்பு திரையுலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு காலகட்டங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய எம்.என்.ராஜம் மற்றும் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுவது முக்கிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. இதற்கான விருது வழங்கும் விழா முதலமைச்சர் தலைமையில் விரைவில் நடைபெற உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!