ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சோதனையின் போது வெடித்து சிதறியது!

 
ஸ்பேஸ் எக்ஸ்

அமெரிக்காவில் சோதனை முயற்சியின் போது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  உலக பெரும் பணக்காரரும் டெஸ்லா உட்பட பல  நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வு, சுற்றுலா உட்பட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ராக்கெட் சோதனையை ஸ்டார்ஷிப் செய்து வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ராக்கெட் ஏவுவதற்கு முன்பே, சோதனை கட்டத்திலேயே வெடித்து சிதறிவிட்டது.  

வெடித்து சிதறல்

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் 10-வது ராக்கெட்டின் சோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே 10வது மிகப்பெரிய விண்கலமாகவும், சக்திவாய்ந்த ராக்கெட் சிஸ்டமாகவும் ஸ்டார்ஷிப் விண்கலம் கருதப்படுகிறது. இந்நிலையில்  ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் தீப்பிடித்து எரிந்தது, அந்நிறுவனத்துக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது