பெரும் அதிர்ச்சி... சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை !

தமிழகத்தில் கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் சொக்கலிங்கம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வயது 54. இவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வ.உ.சி. மைதானத்தில் உள்ள புங்கை மரத்தில் சேலையில் தூக்குப்போட்டு சொக்கலிங்கம் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சொக்கலிங்கத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா? குடும்ப பிர்ச்சனையா? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!