புத்தாண்டுக்கு ஊருக்கு கிளம்பிட்டீங்களா? ... தமிழகம் முழுவதும் 570 சிறப்பு பேருந்துகள்!
புத்தாண்டு பயணம்: சென்னையிலிருந்து 570 சிறப்பு பேருந்துகள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதல் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. 30, 31-ந்தேதிகள் மற்றும் ஜனவரி 1-ந்தேதி பயண நெரிசல் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு 30-ந்தேதி 240 பேருந்துகளும், 31-ந்தேதி 255 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, மாதாவரம் பகுதிகளிலிருந்தும் பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுவார்கள்.

இந்த வாரத்தில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
