நாளை ரேஷன்கார்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம்!
சிவகங்கை மாவட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொது விநியோகத் திட்டத்துக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. டிசம்பர் மாதத்திற்கான இந்தச் சிறப்பு முகாம் டிசம்பர் 13, 2025 அன்று நடக்கிறது. இது சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் முகாம் நடக்கும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் கலந்துகொள்ளலாம். குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க இந்த முகாம் உதவியாக இருக்கும். பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளையும் செய்யலாம். புதிய ரேஷன் அட்டை பெறவும், நகல் அட்டை பெறவும் வாய்ப்பு உள்ளது.

கைப்பேசி எண்ணைப் பதிவு செய்ய அல்லது மாற்றவும் இங்கு வசதி உண்டு. ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்துப் புகார் அளிக்கலாம். அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்து புகார் கூறலாம். பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள அலுவலகத்தில் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
