மதுரையில் சிறப்பு படை காவலர் தற்கொலை !
மதுரை எழுமலை கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், 2023ல் சிறப்புப் படை காவலராக பணியில் இணைந்தவர். நேற்று இரவு முதல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், இன்று அதிகாலை ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தார்.

அதிகாலை 3 மணியளவில், பாதுகாப்பிற்காக பயன்படுத்திய துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வரும்வழியிலேயே மகாலிங்கம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவரது உடல் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடற்கூறாய்வு நடைபெற்று வருகிறது.

சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மகாலிங்கம் தற்கொலைக்காக யாரும் காரணமில்லை என குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென நேர்ந்த இச்சம்பவம் போலீஸ் துறையில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
