சிறப்பு அரசாங்க ஊழியர் பணி முடிவு... எலான் மஸ்க் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகல்!
உலகின் முண்ணனி பணக்கார தொழிலதிபர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார். அவர் ட்ரம்பின் பிரச்சாரத்திற்கு நிதி உதவி வழங்கியதுடன், அவரது நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
As my scheduled time as a Special Government Employee comes to an end, I would like to thank President @realDonaldTrump for the opportunity to reduce wasteful spending.
— Elon Musk (@elonmusk) May 29, 2025
The @DOGE mission will only strengthen over time as it becomes a way of life throughout the government.
அதன்படி, ட்ரம்ப் 2025 ஜனவரியில் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றதும் அரசின் செலவுகளைக் குறைப்பதற்காகவும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவும் “Department of Government Efficiency” என்ற புதிய துறையை உருவாக்கி அதன் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார். இந்த பதவியை அவர் 130 நாட்கள் மட்டுமே ஏற்க ஒப்புக் கொண்டிருந்தார்.

இருப்பினும், எலான் மஸ்க் DOGE தலைவராக செயல்பட்ட போது, அரசு ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். வெளிநாடுகளுக்கான நிதி குறைப்பு உட்பட பல்வேறு திடீர் முடிவுகளை அதிரடியாக செயல்படுத்தினார். இந்நிலையில், அமெரிக்க சிறப்பு அரசு பணியாளராக தனது பணிக்காலம் முடிவடைந்ததாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அரசின் வீண் செலவுகளை குறைப்பதே DOGE-ன் முக்கிய பணியாக இருந்ததாகவும், இந்த வாய்ப்பை வழங்கிய டிரம்புக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில், ”சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது; தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
