கோடை விடுமுறையை கொண்டாட தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில்... சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ தமிழ்ப் புத்தாண்டு, விஷு, புனித வெள்ளி, கோடைக்கால கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் - போத்தனூா் இடையே வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் 11, 18, 25, மே 2 ஆகிய நாட்களிலும், மறுமாா்க்கமாக போத்தனூா் - தாம்பரம் இடையே (ஞாயிற்றுக்கிழமைகளில்) வாராந்திர சிறப்பு ரயில் (06186) மே 13, 20, 27, மே 4 ம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.
20 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில் தாம்பரத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருத்துவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக போத்தனூருக்கு சனிக்கிழமை காலை 7.15 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்படும் ரயில் வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு திங்கட்கிழமை பிற்பகல் 12.15 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!