கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பு ரயில் இயக்கம்!

 
எக்ஸ்பிரஸ் ரயில்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டிப் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், மைசூரு மற்றும் தூத்துக்குடிக்கு இடையே சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தென்மேற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் எக்ஸ்பிரஸ்

மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் சிறப்பு இரயில் (வண்டி எண்: 06283) வருகிற டிசம்பர் 23 மற்றும் 27-ஆம் தேதிகளில் மாலை 6.35 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்குத் தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து மைசூருவுக்குச் செல்லும் சிறப்பு இரயில் (வண்டி எண்: 06284) வருகிற டிசம்பர் 24 மற்றும் 28-ஆம் தேதிகளில் மதியம் 2 மணிக்குத் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூருவை வந்தடைகிறது.

 எக்ஸ்பிரஸ் ரயில்

இந்தச் சிறப்பு இரயில்கள் இரு மார்க்கங்களிலும் மண்டியா, பெங்களூரு, ஓசூர், சேலம், மதுரை, கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ஏற்பாடு பண்டிகைக் காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!