புத்தாண்டு பயணம் இனி சுலபம்… மைசூரு–மதுரை வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்!

 
எக்ஸ்பிரஸ் ரயில்
 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நெரிசலை சமாளிக்க தென்மேற்கு ரயில்வே மண்டலம் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன் ஒரு பகுதியாக மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு புத்தாண்டு விடுமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (06283) மைசூருவில் இருந்து 23, 27 தேதிகளில் மாலை 6.35 மணிக்கு புறப்படும்.

ரயில்

பெங்களூரு, சேலம், கரூர் வழியாகச் செல்லும் இந்த ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு மதுரை வந்து, பகல் 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில் (06284) 24, 28 தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மதுரை வழியாக மைசூரு சென்றடைகிறது. பயணிகளுக்காக குளிரூட்டப்பட்ட, தூங்கும் வசதி மற்றும் பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஊட்டி மலை ரயில் ரத்து!!

இந்த சிறப்பு ரயில் மாண்டியா, ராமநகரம், பெங்களூரு, ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். விடுமுறை காலத்தில் தென் தமிழகம் செல்லும் பயணிகளுக்கு இது பெரும் நிம்மதியை தரும். புத்தாண்டு பயணத்திற்கு இந்த ரயில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!