பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு ரயில் !
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள் சென்னை திரும்ப வசதியாக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், நெல்லையில் இருந்து 18-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ஒருவழி சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

இதனால் பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கூடுதல் ரெயில்கள் அறிவிக்கப்படுமா என பலரும் எதிர்பார்த்தனர். பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.

இந்த நிலையில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு புதிய சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 18-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
