நாகர்கோயில்–தாம்பரம் சிறப்பு ரயில்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக நாகர்கோயில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ம் தேதி இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் நாகர்கோயிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். ஜனவரி 19-ம் தேதி காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். பொங்கல் விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

இந்த ரயில் நாகர்கோயில், நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்றடைகிறது. பண்டிகை கால கூட்டத்தை குறைக்க இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
