ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்... ஏப்ரல் முதல் ஹைதராபாத் மற்றும் கச்சிகுடா சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

 
 சிறப்பு ரயில்  சிறப்பு ரயில்

தெற்கு  ரயில்வே பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, ஹைதராபாத் - கன்னியாகுமரி மற்றும் கச்சிகுடா - மதுரை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் நிரந்தர ரயில்களாக மாற்றப்படவுள்ளன. இதில் குறிப்பாக மதுரையுடன் முடிந்து வந்த கச்சிகுடா ரயிலானது, இனி தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுச் செயல்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கு எளிதாகப் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரயில் எக்ஸ்பிரஸ்

ஹைதராபாத் - கன்னியாகுமரி இடையிலான ரயில் (17069) ஏப்ரல் 1ம் தேதி முதல் புதன்கிழமைகளில் மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், திருச்சி மற்றும் மதுரை வழியாக வெள்ளிக்கிழமை அதிகாலை கன்னியாகுமரியைச் சென்றடையும். மொத்தம் 24 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலில் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி பெட்டிகள் அதிக அளவில் இணைக்கப்பட்டுள்ளன. மறுமார்க்கமாக கன்னியாகுமரியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டுச் சனிக்கிழமை பிற்பகல் ஹைதராபாத்தைச் சென்றடையும் வகையில் கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

ரயில்

அதேபோல், கச்சிகுடா - தூத்துக்குடி ரயில் (17615) ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் திங்கட்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, ஆந்திராவின் முக்கிய நகரங்கள் வழியாகத் தமிழகத்தின் காட்பாடி, வேலூர், பண்ருட்டி மற்றும் கடலூர் துறைமுகம் வழியாகச் செவ்வாய்க்கிழமை இரவு தூத்துக்குடியைச் சென்றடையும். இந்த ரயிலானது தூத்துக்குடியிலிருந்து புதன்கிழமைகளில் காலை புறப்பட்டு வியாழக்கிழமை மதியம் கச்சிகுடாவைச் சென்றடையும். இந்த புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்பு காரணமாகத் தமிழகத்தின் தொழில் நகரங்கள் மற்றும் ஆன்மீகத் தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!