தென் மாவட்ட மக்களுக்கு ஜாக்பாட்... ஏப்ரல் 16 முதல் கோடை விடுமுறைக்காகச் சிறப்பு ரயில்கள் !
கோடை விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, நெல்லை - சென்னை இடையே அதிவேக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விடுமுறை காலங்களில் வழக்கமாக நிலவும் கடும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் எவ்விதத் தடையுமின்றி பயணம் செய்யவும் இந்த 'மெகா' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ், நெல்லை சந்திப்பிலிருந்து ஏப்ரல் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகள்) இரவு 11.40 மணிக்குச் சிறப்பு ரயில் (06070) புறப்பட்டு, மறுநாள் காலை சென்னை எழும்பூரைச் சென்றடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரிலிருந்து இன்று (ஏப். 10) மதியம் 12.30 மணிக்குச் சிறப்பு ரயில் (06069) நெல்லைக்குப் புறப்பட்டுச் சென்றது. இது தவிர, தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குச் சிறப்பு ரயில் (06151) இயக்கப்பட உள்ளது.

தமிழ் புத்தாண்டு வார இறுதியில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால், இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. ரயில்களில் இடமின்றி தவித்த மக்கள், இந்தச் சிறப்பு ரயில்கள் மூலம் தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். ஒருபுறம் கோடை வெயில் வாட்டினாலும், ரயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளுக்குக் குளிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்கிற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்தச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
